close
Choose your channels

தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இணையும் பிரபல பாடலாசிரியர்.. தெறிக்க வைக்கும் வரிகளா?

Tuesday, January 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’GOAT’ திரைப்படத்தில் முதன் முதலாக பிரபல பாடலாசிரியர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் சமீபத்தில் நடித்து வரும் திரைப்படங்களுக்கு பாடல் ஆசிரியர் விவேக் தான் பெரும்பாலான பாடல்களை எழுதி வருகிறார் என்பதும் அவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’GOAT’ திரைப்படத்தில் பாடல்கள் எழுதும் பணியை பிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஏற்றுள்ளதாக தெரிகிறது.

முதல் முதலாக தளபதி விஜய்க்காக அவர் பாடல்களை எழுத இருக்கும் நிலையில் அந்த பாடல்கள் எப்படி இருக்கும் என்பதை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே பல பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியிருந்தாலும், முதல் முதலாக விஜய்க்காக அவர் எழுதும் பாடல் தெறிக்க வைக்கும் அளவுக்கு வரிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.