close
Choose your channels

4 நிமிட பைக் சேஸிங் காட்சி: 'வலிமை'  சென்சாரில் கிடைத்த சூப்பர் தகவல்

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் சரியாக அடுத்த வியாழக்கிழமை ரிலீசாக இருக்கும் நிலையில் தினந்தோறும் ‘வலிமை’ படத்தின் புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இன்றும் பைக் சேஸிங் காட்சி குறித்த புரமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் சற்றுமுன் சென்சார் சான்றிதழில் உள்ள சில குறிப்புகள் வெளியாகி உள்ளன

அஜித் கேரக்டரான அர்ஜுன் மற்றும் சில பைக்கர்ஸ்களின் பைக் சேஸிங் காட்சிகள் 4 நிமிடங்கள் 22 வினாடிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிக நீண்ட பைக் சேஸிங் காட்சிகள் ‘வலிமை’ படத்தில் இருப்பதால் ஆக்சன் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை காண்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.