close
Choose your channels

'பைரவா' படத்துடன் கனெக்சன் ஆகும் வெற்றிமாறன் - ஜிவி பிரகாஷ்

Saturday, January 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான 'விசாரணை' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை உலக அளவில் கொண்டு சென்றவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு சென்ற படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது. மேலும் தற்போது அவர் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம்தான் இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை' போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தற்போது அவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.