close
Choose your channels

கவுண்டமணி படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்?

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் ’பழனிச்சாமி வாத்தியார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

செல்வ அன்பரசன் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சிவகார்த்திகேயன் கவுண்டமணியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரலான நிலையில் தற்போது கவுண்டமணியின் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுண்டமணியின் மேனேஜராக இருந்த மதுரை செல்வம் என்பவர்தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் கவுண்டமணி ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்கிறார் என்று முழுக்க முழுக்க இந்த படம் காமெடி அம்சத்தை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.