close
Choose your channels

விரைவில் வருகிறது கூகுள் கண். கேமராவாக மாறும் கண்கள்

Monday, November 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கண்பார்வை குறைபாடு உள்ளவர்களின் குறையை போக்க கண்தானம் செய்ய வேண்டும் என்று இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் கூகுள் நிறுவனம் சைபார்க் லென்ஸ் என்னும் புதியவகை லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்து இதற்கு காப்புரிமையையும் பெற்றுவிட்டது. இதனால் விரைவில் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த கூகுள் கண் லென்ஸ் சந்தைக்கு வரவுள்ளது.
கண்பார்வை குறைவு உள்ளவர்களுக்காக கூகுள் நிறுவனம் பல ஆண்டுகளாக நவீன காண்டாக்ட் லென்ஸ் (Contact lense) மற்றும் ஸ்மார்ட் க்ளாஸ் (Smart Glass) தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்நிறுவனம் புதிய லென்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளது. சைபார்க் லென்ஸ் (Cyborg lenses) என்று பெயரிட்டுள்ள இந்த லென்ஸை கண்களுக்குள் பொருத்திவிட்டால், பார்வைக்குறைபாடு நோய்கள் பலவற்றை முற்றிலும் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி முதுமை காரணமாக ஏற்படும் பார்வைக்குறைபாடு, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உள்பட பலவிதமான கண்நோய்களை போக்கவும் இந்த லென்ஸ் பயன்படும்.
அதுமட்டுமின்றி இந்த லென்ஸ் கேமராவாகவும் செயல்படும். கண்மணிகளின் அசைவை வைத்து இயங்கும் இந்த லென்ஸை வயர்லெஸ் கருவிகளுடன் இணைத்தும் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.