close
Choose your channels

கத்திச்சண்டை' ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

Monday, November 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் நவம்பர் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கத்திச்சண்டை' படக்குழுவினர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
உலகளவிலுள்ள அனைத்து தமிழ் ரசிகர்களும் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 'கத்திச்சாண்டை' உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பணநெருக்கடியில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது இப்படத்தை வெளியிடுவதை நியாயமற்ற செயலாக கருதுகிறோம். எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை படவெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
விஷால் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். படம் வெளீயாகும்பொழுது கண்டிப்பாக ஒரு முழுமையான விருந்தாக அனைத்து ரசிகர்களுக்கும் அமையும். நன்றி
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.