close
Choose your channels

நீ மட்டும் நாமினேஷனுக்கு வந்த... ஜிபி முத்துவின் ஆர்மி எச்சரிக்கை!

Wednesday, October 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீ மட்டும் நாமினேஷனுக்கு வந்தால் உன்னை உடனடியாக வெளியேற்றி விடுவோம் என ஜிபி முத்துவின் ஆர்மியினர் சமூக வலைதளங்களில் தனலட்சுமிக்கு எச்சரிக்கை விடும் வகையில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு நாள் முடிந்து இன்று மூன்றாவது நாள் நடைபெறவிருக்கும் நிலையில் இன்றைய புரொமோ ஒவ்வொன்றும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என்றும் அவர் நாரதர் வேலை செய்து கொண்டு அவரது டீமுக்கே கெட்ட பெயர் வாங்கி கொடுக்கின்றார் என்றும் தனலட்சுமி கேமரா முன் கூறுகிறார்.

இதை பார்த்து ஆவேசமடைந்த ஜிபி முத்துவின் ஆர்மியினர் தனலட்சுமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ’ஜிபி முத்து பின்னாடி ஒரு பெரிய படை இருக்கு என்பதை மறந்து விடாதே தனலட்சுமி’ என்று ஒருவர் பதிவு செய்துள்ளார். இன்னொருவர் ’நீ மட்டும் நாமினேஷனுக்கு வந்தால் உன்னை தான் முதல் நபராக வெளியே அனுப்பி விடுவோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் ஜிபி முத்து ஆர்மியினர்கள் ஆவேசமாக பதிவு செய்வதை பார்க்கும் நிலையை பார்க்கும் போது அவர் கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சியின் இறுதி வரை தாக்குப் பிடித்து நிற்பார் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.