close
Choose your channels

' ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்'.. ரிஷப் ஷெட்டியின்  'காந்தாரா டிரைலர்

Wednesday, October 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபகாலமாக கன்னட திரைப்படங்கள் பான் - இந்திய திரைப்படங்களாக உருவாகி மிகப்பெரிய வசூலை பெற்று வருகின்றது என்பதும் அதற்கு ’கேஜிஎப்’ ‘மற்றும் கேஜிஃப் 2’ படங்களே சான்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘காந்தாரா’ என்ற கன்னட படம் மிகப்பெரிய அளவில் சமீபத்தில் ரிலீசாகி வெற்றி பெற்ற நிலையில் வரும் 15ஆம் தேதி தமிழில் ரிலீசாக உள்ளது.

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ரிஷப் ஷெட்டி ஜோடியாக சப்தமி நடித்துள்ள இந்த படத்தில் கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான டிரைலரில் உள்ள காட்சிகள் அசத்தலாக இருப்பதை அடுத்து தமிழிலும் இந்த படம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ஏற்கனவே 50 கோடி ரூபாய் வசூல் செய்து விட்ட நிலையில் தமிழிலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.