close
Choose your channels

தமிழ் சினிமாவின் 'ரத்தினம்' மணிரத்னம்: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Friday, June 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க வார இதழ் 'டைம்' உலகின் 100 சிறந்த படங்கள் குறித்த சர்வே எடுத்தபோது அதில் இடம் பெற்ற ஒரு திரைப்படம் 'நாயகன்'. இந்த பெருமைக்குரிய படத்தை இயக்கிய நாயகன் மணிரத்னம் அவர்கள் இன்று தனது 62வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இன்று பல திரைப்படங்கள் உலக தரத்தில் எடுக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்படுகின்றது ஆனால் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல பிள்ளையார் சுழி போட்டவர் மணிரத்னம் தான். அவர் இயக்கிய 'மெளன ராகம், நாயகன், அஞ்சலி, அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா' போன்ற படங்கள் இதை உண்மை என்பதை நிரூபிக்கும்
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சுயம்புவாக தோன்றிய இயக்குனர் மணிரத்னம். இன்று வரை அவர் ஸ்க்ரிப்ட் எழுதும்போது யாரையும் பக்கத்தில் வைத்து கொள்வதில்லை. முழு ஸ்க்ரிப்டையும் பென்சிலால்தான் எழுதுவார். பின்னர் கரெக்சன் செய்துவிட்டு அந்த ஸ்கிரிப்ட் நேரடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்வார்.
மணிரத்னம் தனது படம் ரிலீஸ் ஆகும்போது மற்றவர்கள் போல் டென்ஷன் கொள்ள மாட்டார். படத்தின் வெற்றி, தோல்வி குறித்த கருத்துக்களை சமமாகவே எடுத்து கொள்வார். அதேபோல் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் அவர் தலையில் ஏற்றி கொள்வதே இல்லை
மணிரத்னம் சென்னைக்கார் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். இருப்பினும் சிறுவயதில் இருந்தே சென்னையில்தான் வாழ்ந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு, பின்னர் மும்பையில் எம்.பி.ஏ படிப்பை முடித்த மணிரத்னம், சிவாஜிகணேசன், நாகேஷ், கே.பாலசந்தர் ஆகியோர்களை பார்த்து வியந்து திரைத்துறைக்கு வந்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சத்யராஜ் நடித்த 'பகல் நிலவு' படம் தான் மணிரத்னம் இயக்கிய முதல் தமிழ்ப்படம். அதன்பின்னர் மோகன் நடித்த 'இதயகோவில்' இந்த இரண்டு படங்களும் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் மணிரத்னம் அவர்களை பிரபலமாக்கியது 'மெளனராகம்' படம் தான். இன்றும் இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டால் முழுப்படத்தையும் பொறுமையாக பார்க்க என்றே ஒரு கூட்டம் உள்ளது. அதன் பின்னர் 'நாயகன்', ரோஜா ஆகிய படங்கள் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது
மணிரத்னம் அவர்களுக்கு பிடித்த இயக்குனர் பாலா. இவர் இயக்கிய 'பிதாமகன்', 'நான் கடவுள்' படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!
மணிரத்னம் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். அதேபோல் 'எனக்கு பெண் குழந்தை பிடிக்கும்' என்ற வசனம் இவரது பல படங்களில் இடம்பெற்றிருக்கும்

மணிரத்னம் அவர்கள் தனிமையை விரும்புபவர் மட்டுமின்றி எளிமையை விரும்புபவர். எவ்வளவு பெரிய விழா என்றாலும் எளிமையான பருத்து உடைகள் தான் அவரது தேர்வு
மணிரத்னம் கடந்த 1988ஆம் ஆண்டுதான் முதன்முதலில் சுஹாசினியை நேரில் சந்தித்தார். அந்த வருடமே இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நட்சத்திர தம்பதிக்கு 'நந்தன்' என்ற மகன் உள்ளார். மனைவியை எப்போதும் 'ஹாசினி' என்றே மணிரத்னம் அழைப்பார். அதேபோல் சுஹாசினியும் இவரை சிம்பிளாக 'மணி' என்று அழைப்பார்.
மணிரத்னம் இயக்கிய படங்களில் அவருக்கு ரொம்ப பிடித்த படம் 'இருவர்'. இந்த படத்தின் தோல்வி மட்டுமே அவரை கொஞ்சம் வருத்தம் அடைய செய்ததாம்.
மணிரத்னம் இயக்கிய 'மெளன ராகம்', 'கீதாஞ்சலி', 'அஞ்சலி', 'ரோஜா', 'பம்பாய், 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்கள் தேசிய விருதினை வென்றுள்ளன. மேலும் ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், இருவர் ஆகிய படங்கள் உலக அளவில் பல விருதுகளை வென்றுள்ளது.
கடந்த 90களில் பிரபலமான இயக்குனர்களில் இன்றளவும் ஆக்டிவ் ஆக இருக்கும் இயக்குனர்களில் மிகச்சிலரில் மணிரத்னம் அவர்களும் ஒருவர். இதற்கு முக்கிய காரணம், இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கும் ஏற்ற வகையில் படமெடுக்கும் அளவுக்கு தன்னை அப்டேட் செய்துள்ளார். இதற்கு உதாரணம் 'ஓகே கண்மணி'. மணிரத்னம் என்பவரை யார் என்றே தெரியாதவர் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் இந்த படத்தை இளைஞர் ஒருவர் தான் இயக்கியிருப்பார் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் இளமை கொட்டி கிடக்கும்
'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க தகுதியுள்ள இயக்குனர் இவர் ஒருவர் மட்டுமே என்று பலர் கூறுவதுண்டு. இந்த படத்தை இயக்க அவ்வப்போது முயற்சி செய்தும் வருகிறார். இவரது முயற்சி கூடியவிரைவில் வெற்றியடைய இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.