close
Choose your channels

உலக நாயகன் மகள் அக்சராஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Wednesday, October 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகளும், நடிகையும் உதவி இயக்குனருமான அக்சராஹாசன் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
கமல்ஹாசன், சரிகா, ஸ்ருதிஹாசன் என்ற கலைக்குடும்பத்தில் இருந்து வந்தபோதிலும் முதலில் அக்சராஹாசனுக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை. அவர் இயக்குனராக வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது கூட அதை மறுத்துவிட்டு இயக்கம் என்ற துறையில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த 'ஷமிதாப்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவரால் மறுக்க முடியவில்லை. அந்த படம் தந்த வெற்றியின் காரணமாக தற்போது அஜித்தின் 'தல 57' மற்றும் விஷாலின் 'துப்பறிவாளன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இருப்பினும் தனது தந்தை இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். அக்சராஹாசன் இயக்கம், நடிப்பு என இருதுறைகளிலும் சிறந்து விளங்க இந்த பிறந்த நாளில் அவரை வாழ்த்துகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.