close
Choose your channels

இளம் இசைப்புயல் அனிருத்துக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Sunday, October 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய தலைமுறை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள் என்ற நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் இளம் இசைப்புயல் அனிருத் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’3’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், முதல் படத்திலேயே ’ஒய் திஸ் கொலைவெறி’ என்ற பாடலை கம்போஸ் செய்து அந்த பாடல் உலகம் முழுவதும் வைரலாகும் அளவுக்கு அவருடைய எண்ட்ரி இருந்தது.

இதனை அடுத்து ’எதிர்நீச்சல்’ ’வணக்கம் சென்னை’ ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட சில படங்களில் இசையமைத்த அனிருத் முதல் முறையாக விஜய் நடித்த ’கத்தி’ திரைப்படத்திற்கும் அதனை அடுத்து அஜித் நடித்த ’வேதாளம்’ திரைப்படத்திற்கும் இசையமைத்தார். இரண்டு படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகியது.

கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவரின் திரைப்படங்களுக்கும் அவர் குறுகிய காலத்தில் இசையமைத்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் வெளியான சூப்பர்ஹிட் படங்களான ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘டான்’, ’விக்ரம்’ ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய அனைத்து படங்களுக்கும் அனிருத் தான் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தற்போது தயாராகி வரும் ரஜினியின் ’ஜெயிலர்’ கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ , அஜித்தின் ‘ஏகே 62’, ஷாருக்கானின் ‘ஜவான்’, உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனிருத்துக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில் அவர் மென்மேலும் இசை உலகில் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.