தம்பி நிக்ஸனுடன் நெருக்கமாக நடனம் பழகும் பூர்ணிமா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தம்பி நிக்ஸனுடன் நெருக்கமாக நடனம் பழகும் பூர்ணிமா..!பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் இறுதி போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் போட்டியாளர்களுக்குள் இந்த 85 நாட்களில் ஒரு விதமான உறவு ஏற்பட்டுள்ளது.
மணி, ரவீனா ரொமான்ஸ் உறவு என்றால் பூர்ணிமா, நிக்ஸன் ஆகிய இருவரும் அக்கா தங்கை உறவில் உள்ளன.ர் பூர்ணிமாவை அக்கா அக்கா என்று நிக்ஸன் கூறுவதும் நிக்ஸனை தம்பி என்று பூர்ணிமா கூறுவதும் பலமுறை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் அக்கா தம்பி என தங்களை வெளிப்படுத்திக் கொண்ட நிக்ஸன் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் ’வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாடலுக்கு நெருக்கமாக நடனம் ஆடி உள்ளது சக போட்டியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூர்ணிமா மற்றும் நிக்ஸன் ஆகிய இருவரும் அசத்தலாக நடனம் ஆடினார்கள் என்றாலும் அக்கா தங்கை உறவில் உள்ளவர்கள் இப்படி ஒரு நடன அசைவு கொண்ட பாடலை தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு பார்வையாளர்கள் என்ன ரியாக்ட் செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#Nixen and #Poornima performance
— Sekar 𝕏 (@itzSekar) December 26, 2023
"Vennilave Vennilave" song 🎶
Don't miss #Vishnu ultimate reaction 😂#BiggBossTamil7 #BiggBoss7Tamilpic.twitter.com/l6h1mCAQoa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments