close
Choose your channels

சுந்தர் சியின் 'சங்கமித்ரா' இணைவாரா தீபிகா படுகோன்?

Saturday, October 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'சங்கமித்ரா' திரைப்படம் மிக பிரமாண்டமாக ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர். சுந்தர் சி இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தின் நாயகி கேரக்டர் மிகவும் வலிமையானது என்பதால் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது தீபிகா படுகோன் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தீபிகா படுகோன் ஏற்கனவே பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருப்பதால் நீண்ட நாள் கால்ஷீட் தர ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.