close
Choose your channels

பொங்கல் ரேஸில் எத்தனை படங்கள்?

Tuesday, January 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய்யின் 'பைரவா' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த வருடம் கிட்டத்தட்ட 9 படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று விளம்பரப்பட்டுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக 'தானா சேர்ந்த கூட்டம்' 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'குலேபகாவலி', 'கலகலப்பு 2', 'மதுர வீரன்', 'மன்னர் வகையறா', 'நிமிர்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஸ்கெட்ச்', ஆகிய படங்கள் வெளிவரும் என்று கூறப்பட்டாலும், இத்தனை படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் கடைசி நேரத்தில் ஒருசில படங்கள் பின்வாங்க வாய்ப்பு உள்ளது.

தானா சேர்ந்த கூட்டம், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மதுரவீரன், குலேபகாவலி ஆகிய படங்கள் ரிலீஸ் உறுதி என்றே தெரிகிறது. 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும், மற்ற படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதை பொறுத்து ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

மேலும் ஜனவரி 26ஆம் தேதி விஷாலின் 'இரும்புத்திரை' மற்றும் ஜெயம்ரவியின் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால், பொங்கலை மிஸ் செய்யும் படங்கள் பிப்ரவரிக்கு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.