close
Choose your channels

சல்மான்கான் படத்தில் பரத் வில்லனா? அதிகாரபூர்வ தகவல்கள்!

Wednesday, November 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் ’ராதே’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தமிழ் நடிகர் பரத் நடித்த உள்ளதாக வெளிவந்த செய்தியில் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒருசில ஊடகங்களில் தகவல்கள் இந்த நிலையில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்

இந்த படத்தில் ரந்தீப் ஹூடா என்ற நடிகர் வில்லனாக நடிப்பதாகவும், தான் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகவும் பரத் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தற்செயலாக பிரபுதேவாவை சந்தித்ததாகவும், அவருடன் தனக்கு 10 ஆண்டுகால நட்பு இருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது சல்மான்கான் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு பிரபுதேவா கொடுத்ததாகவும், அதை கேட்ட தான் உடனே அவர் கூறிய கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் கூறியுள்ளார்

மேலும் இதுவரை சல்மான்கான் அவர்களை ஒரு ரசிகராக தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த தனக்கு தற்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் இந்த வாய்ப்பை தனக்கு அளித்த பிரபுதேவாவுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றும் பரத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.