close
Choose your channels

அடல்ட் காமெடி படத்தின் 10 நாள் அபார வசூல் விபரம்

Monday, May 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 4ஆம் தேதி வெளியான கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் காமெடி திரைப்படத்திற்கு திரையுலகினர் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் இந்த படம் இளைஞர்களின் அமோக ஆதரவுடன் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படத்தின் ஓப்பனிங் வசூலே அபாரமாக இருந்த நிலையில் 10 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் ரூ.2.42 கோடியும், செங்கல்பட்டில் ரூ.4.1 கோடியும், கோவையில் ரூ.2.8 கோடியும் நெல்லை குமரி பகுதியில் ரூ.68 லட்சமும் வசூல் செய்துள்ளது.

மேலும் கடந்த வாரம் மூன்று புதிய படங்கள் வெளியாகி மூன்றுமே நல்ல ரிசல்ட்டை பெற்றுள்ள போதிலும் சென்னையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் 17 திரையரங்குகளில் ரூ.50,41,708 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் வியாபாரமே ரூ.7.5 கோடிக்கு ஆகியுள்ள நிலையில் இருமடங்கும் வசூல் செய்து தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.