close
Choose your channels

இசைஞானிக்கு கெளரவம் செய்ய 'தாரை தப்பட்டை' குழுவினர் திட்டம்

Sunday, November 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் இசைஞானி இளையராஜாவின் 1000வது படம் என்ற மிகப்பெரிய பெருமையை பெற்றுள்ளதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி இசைஞானியை கெளரவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழா சமீபத்தில் அவர் பெற்ற 'நூற்றாண்டு விருது' பெற்றதற்கான பாராட்டு விழாவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிடுகிறது. சசிகுமார், வரலட்சுமி, சதீஷ் கெளசிக், பிரகதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு செழியன் ஒளிப்பதிவும் கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை பாலாவின் 'பி ஸ்டுடியோ' தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.