close
Choose your channels

பிரபுசாலமன் இயக்கும் 'கும்கி 2' படம் குறித்த முக்கிய தகவல்

Wednesday, September 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடித்த 'கும்கி' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது தயாராகவுள்ளது.

பிரபல இயக்குனர் லிங்குசாமியின் உறவினர் மதி நாயகனாகவும், தெலுங்கு நட்சத்திர தம்பதிகள் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதிகளின் மகள் ஷிவானி நாயகியாகவும் இந்த படத்தில் அறிமுகமாகின்றனர். சூர்யாவின் 'அஞ்சான்' படத்தை தயாரித்த பென் மூவீஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது.

யானைகள் அதிகம் உள்ள தாய்லாந்து நாட்டில் இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இன்றுமுதல் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கும்கி' முதல் பாகம் போலவே 'கும்கி 2' படமும் வெற்றி பெற இயக்குனர் பிரபுசாலமன் மற்றும் படக்குழுவினர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.