close
Choose your channels

மெட் காலா- பேஷன் நிகழ்ச்சியில் பூனை நடைபோட்ட இந்திய நடிகைகள்… வைரல் புகைப்படம்!

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட் காலா பேஷன் நிகழ்ச்சியில் இந்திய நடிகைகளான நடிகை ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். மேலும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் மதிக்கப்படும் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியிலுள்ள மேட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் கடந்த 1948 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மே 1 ஆம் தேதி பேஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழா என்பதால் இந்நிகழ்விற்கு எப்போதும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடத்திற்கான மெட் காலா பேஷன் நிகழ்ச்சி மே 1 அன்று மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர் ஃபெக்கட்டிற்கு மரியாதை செலுத்தும் கருப்பொருளோடு நடத்தப்பட்டது.

இதில் உலகப் பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பணக்காரர்கள், கலை ஆர்வலர்கள் ஆகியோர் வெள்ளை மற்றும் கருப்பு உடை, முத்துப் பதிக்கப்பட்ட உடையணிந்து கலந்து கொண்டனர். சிலர் ஃபெக்கட்டின் பூனையை கவுரவிக்கும் வகையில் பூனை போன்ற உடைகளையும் அணிந்து வந்திருந்தனர்.

இந்நிகழ்வில் முதல் முறையாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் கலந்து கொண்டார். அவர் மணிகள் பதிக்கப்பட்ட வெள்ளை நிற கவுன் ஒன்றை அணிந்திருந்தார். இது ஆடை வடிவமைப்பாளர் பிரபால் குருங் என்பவர் வடிவமைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்தியப் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பாரம்பரிய உடையில் வந்திருதார். இவரது உடையும் பிரபால் குருங் வடிவமைப்பில் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தற்போது ஹாலிவுட் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் மெட் காலாவில் கலந்து கொண்டார். அவர் கறுப்பு நிற கவுனையும் நிக் கறுப்பு நிற கோட் சூட்டையும் அணிந்திருந்தனர். இவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.