close
Choose your channels

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரருக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஒருவருக்கு திருமணம் நடந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் பங்கேற்றவரும், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரில் ஒருவருமான விஜய்சங்கர் திருமணம் இன்று நடைபெற்றது. அவர் வைஷாலி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தனது திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் பங்கு கொண்டுள்ள சன்ரைசர்ஸ் அணியும் தனது சமூக வலைதளத்தில் விஜய்சங்கரின் திருமண புகைப்படங்களை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணிக்காக விஜய்சங்கர் 12 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர் ஐதராபாத் அணிக்காக விஜய்சங்கர் 7 போட்டிகளில் விளையாடி 101 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.