close
Choose your channels

வயசானாலும் அழகு மட்டும் குறையல… மூத்த நடிகையைப் பார்த்து உருகும் நெட்டிசன்கள்!

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவை பொறுத்தவரை 90 களில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து கொண்டு இருந்த இவர் தமிழ் சினிமாவில் நுழைந்து தனது அற்புதமான நடிப்பு திறமையாலும் நடனத் திறமையாலும் இளசுகளைக் கட்டிப் போட்டார். இதனால் ஒரு கட்டத்தில் கனவு கன்னியாகவும் வலம் வந்தார்.

அப்படி இவரது நடிப்பில் முதலில் வெளிவந்த திரைப்படங்கள் பிரபுதேவாவுடன் “VIP“, “நேருக்கு நேர்“ போன்ற திரைப்படங்கள். இதைத் தொடர்ந்து அன்றைய முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், பிரசாந்த், அப்பாஸ் என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டார். இதனால் “துள்ளாத மனமும் துள்ளும்“, “வாலி“ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.

கூடவே கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், முரளி என மூத்த நடிகர்களுடன் நடிகை சிம்ரன் நடித்து இருந்தார். அதோடு தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அங்கும் பிரபலமானார். மேலும் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் “பார்த்தாலே பரவசம்” படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்திலும் நடித்து இருந்தார்.

பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கும் முழுக்கு போட்ட இவரை சினிமா விட தயாராக இல்லை. அடுத்து சூர்யாவுடன் “வாரணம் ஆயிரம்”, சூப்பர் ஸ்டாருடன் “பேட்ட” என மீண்டும் தனது ரீஎன்டிரியை கொடுத்தார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான “பாவக்கதைகள்” எனும் அந்தாலஜி திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் தற்போது நடிகர் பிரசாந்துடன் இணைந்து பிரபல ஹிந்தி ரீமேக்கான “அந்தகன்“ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மாதவன் இயக்கும் “ராக்கெட்ரி நம்பி வளைவு” படத்திலும் “துருவநட்சத்திரம்” “சியான் 60“ போன்ற படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்து விட்ட நடிகை தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “வயசு ஆனாலும் உங்க அழகு மட்டும் குறையல” எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை சிம்ரனின் சினிமா வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை நினைவுகூற வைத்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.