close
Choose your channels

கள நிலவரம்: சி.எஸ்.கே. - எஸ்.ஆர்.எச். மோதல் கம் பேக் கொடுக்கத் தயாராகும் ஜடேஜா

Friday, April 8, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரின் 17வது போட்டியில் நாளை மும்பையில் உள்ள டாக்டர் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை போட்டியில் இரு அணிகளுமே தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது புள்ளி பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குவதால் இந்த போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

சென்னை, ஹைதராபாத் நேருக்கு நேர் மோதல்கள்

இரண்டு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் 16 முறை சந்தித்துள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுடன் சென்னை அணி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 5 போட்டிகளில் வென்றுள்ளது, இரண்டாவதாக பேட்டிங் செய்து 7 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல் ஹைதராபாத் அணி சென்னைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 2 போட்டிகளில் வென்றுள்ளது, இரண்டாவதாக பேட்டிங் செய்து 2 போட்டிகளில் வென்றுள்ளது.

டாக்டர் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் சென்னை அணி இதுவரை 4 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வென்றுள்ளது. ஹைதராபாத் அணி இந்த காலத்தில் ஒரு ஆட்டம் மட்டும்தான் விளையாடியுள்ளது, அதிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்த இரு அணிகளுமே இதுவரை மோதி கொண்டதில், சென்னை அணி சார்பாக சுரேஷ் ரெய்னா அதிக ரன்கள் எடுத்துள்ளார், ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் அதிக ரன்கள் குவித்துள்ளார் ஆனால் இருவருமே தற்பொழுது இந்த இரு அணிகளில் இல்லாதது வேதனையே.

சென்னையின் நிலைமை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவின் ஆட்சி பல போட்டிகளில் மூன்று தோல்விகளுடன் தொடங்கியது, அதே நேரத்தில் கேன் வில்லியம்சனின் SRH இந்த சீசனில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் தோல்வியடைந்ததால், 181 என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே 18 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டது.

தோனியிடம் இருந்து ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, நட்சத்திர ஆல்-ரவுண்டர் எவ்வாறு புதிய பொறுப்பை சுமப்பார் என்பதைப் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர் முதல் மூன்று போட்டிகளில் மூன்று தோல்விகள் அவரது கேப்டன்சிக்கு சிறந்த தொடக்கமாக இல்லை. மேலும் போன சீசனில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கைக்வாட் இந்த முறை மோசமான பார்மில் இருப்பது போல் தெரிகிறது. அவர் தாது ஆட்டத்தில் கவனம் செலுத்தி அதிரடி ஆட்டக்காரராக உத்தப்பாவுடன் ஒரு சிறந்த துவக்கத்தை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். சென்னை அணிக்கு தற்பொழுது ஒரு சிறந்த துவக்கம் தேவை.

முதலிலேயே சில விக்கெட்டுகள் பறிகொடுத்து விடுவதால் அடுத்து வரும் வீரர்களுக்கு பிரஷரை அதிகமாக்குகிறது. சென்னை அணியில் சிறந்த வீரர்களுக்கு பஞ்சமே இல்லை. இந்த முறை புதிய அணி என்பதால் ஒன்றிணைந்து விளையாடுவதற்கு சற்று நேரம் பிடிக்கிறது. சென்னை அணியின் ஒவ்வொரு வீரரும் தந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மற்ற அணிகள் துண்ட காணும் துணிய காணும் என்னும் கணக்காக ஓட வேண்டியதுதான்.

என்னதான் மூன்று தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் மோசமான நிலையில் இருந்தாலும், சென்னை அணியின் கம் பாக் விரைவில் பார்க்கப்போகிறோம் என்று தோன்றிய வண்ணம் உள்ளது. மாற்றங்கள் நிகழும்போது, தடுமாற்றங்கள் நிகழ்வது இயல்புதானே.

ஹைதராபாத் நிலைமை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது, அதன் விளைவாக அணியின் ரன் ரேட் விகிதம் மிகவும் பாதித்தது. தொடர்ந்து புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி நடராஜன் ஆகியோர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசிப் போட்டியில் அவர்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. இருப்பினும், அவர்களின் பேட்டிங்தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகிய மூன்று வெளிநாட்டு பேட்டர்களை சேர்த்துள்ளனர், ஆனால் இன்னும் ஒரு பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. ஹைதெராபாத் அணி ஒன்றும் அவ்வளவு மோசமான அணி கிடையாது. தற்பொழுது பார்மில் இல்லை அவ்வளவுதான், சென்னை அணியும் தான் இருக்கும் நிலைமையில் அலட்சியமாக விளையாட வாய்ப்பில்லை.

நாளை போட்டியில் களமிறங்கக்கூடிய அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (C), சிவம் துபே, எம் எஸ் தோனி (WK), டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி/சிமர்ஜீத் சிங்,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் (C), ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (WK), அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்/கார்த்திக் தியாகி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.