close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி?

Wednesday, September 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த மூன்றாவது படமான 'இறைவி' திரைப்படம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்றைய கடைசி நாள் படப்பிடிப்பில் கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, உள்பட படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி படப்பிடிப்பின் இறுதி நாளை கொண்டாடினர். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தீபாவளிக்கு வெளியிடவும், படத்தை வரும் டிசம்பரில் வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, கருணாகரன், கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்து வருகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.