close
Choose your channels

'இறுதிச்சுற்று' படக்குழுவினர்களுக்கு ஒரு சந்தோஷ தகவல்

Friday, January 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாதவன், ரித்திகா சிங், நடிப்பில் சுதா இயக்கிய 'இறுதிச்சுற்று' திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் திரையிடப்பட்டு பாசிட்டிவ் விமர்சனங்களை பத்திரிகையாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.


இதனால் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் இருக்கும் நிலையில் படக்குழுவினர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமான தகவல் வெளிவந்துள்ளது. அதுதான் இந்த படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு சலுகை அளித்துள்ளது என்ற செய்தி.

இந்த தகவல் காரணமாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை இந்த படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.