close
Choose your channels

வேலைநிறுத்தத்திற்கு பின் 'இவன் தந்திரன்' படத்தின் வசூல் எப்படி?

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மாதம் 30ஆம் தேதி கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடித்த 'இவன் தந்திரன்' திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீண்டும் கடந்த வெள்ளி முதல் இந்த படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

கடந்த வார இறுதியில் இந்த படம் சென்னையில் 18 திரையரங்குகளில் 174 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.46,75,098 வசூல் செய்தது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர். மேலும் இந்த படம் கடந்த 30ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.92,70,438 வசூல் செய்து விநியோகிஸ்தர்களையும் திரையரங்கு உரிமையாளர்களையும் திருப்தி செய்துள்ளது.

பெருகி வரும் ஆன்லைன் பைரசி, திருட்டு டிவிடிக்களுக்கு மத்தியில், இடையில் நான்கு நாட்கள் திரையரங்குகளில் திரையிடப்படாமல் இருந்தாலும் 'இவன் தந்திரன்' படம் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.