close
Choose your channels

நடிகர் ஜெய்யின் 'பிரேக்கிங் நியூஸ்' இணையத்தில் வைரல்!

Sunday, November 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’எங்கேயும் எப்போதும்’ ’ராஜா ராணி’ ’கலகலப்பு 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான இவர் தற்போது ஒரே நேரத்தில் 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெய் நடித்த படம் ஒன்றின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’பிரேக்கிங் நியூஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக பானு ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் ஆகியோர்கள் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் தேவ் கில், ராகுல் தேவ் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.