close
Choose your channels

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் எப்போது?

Wednesday, June 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களில் நடித்த ஜெயம் ரவி இந்த வருடம் இதுவரை 'மிருதன்' படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மிகப்பெரிய வெற்றி ஒன்றை கொடுக்கும் திட்டத்துடன் அவர் தற்போது 'போகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனி ஒருவன்' படத்தின் வெற்றிக்கூட்டணியான ஜெயம் ரவி-அரவிந்தசாமி இந்த படத்திலும் இணைந்துள்ளது இந்த படத்தின் ப்ளஸ் ஆக கருதப்படுகிறது. மேலும் இருவருமே போலீஸ் கேரக்டரில் நடிப்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. ஹன்சிகா, அக்ஷரா கவுடா ஆகிய ஹீரோயின்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபுதேவா தயாரிப்பில், டி,இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 'ரோமியோ ஜூலியட்' இயக்குனர் லக்ஷ்மண் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.