close
Choose your channels

சுந்தர் சிக்கு வில்லனான பிரபல காமெடி நடிகர்

Wednesday, June 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின்னர் 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் விடிவி கணேஷ். கரகரப்பான குரலும் டைமிங் காமெடியும் இவரது ப்ளஸ்கள். இந்த படத்திற்கு பின்னர் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்த விடிவி கணேஷ் தற்போது முதல்முறையாக வில்லனாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சுந்தர் சி, பூனம் பாஜ்வா நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள 'முத்தின கத்தரிக்கா' படத்தில் விடிவி கணேஷ் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் வில்லத்தனத்துடன் கூடிய கேரக்டர் என்றும் ஹீரோ சுந்தர் சிக்கு இணையான கேரக்டர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் தன்னுடைய வில்லன் நடிப்பிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவர் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுந்தர் சியின் உதவியாளர் வெங்கட்ராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் பூனம் பாஜ்வா, சிங்கம் புலி, கிரண், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவ்னி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.