close
Choose your channels

ஜெயம் ரவியின் 'அகிலன்' சென்சார் தகவல்..!

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள ‘அகிலன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் புதிய டிரைலர் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

அது மட்டும் இன்றி சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி மில்லியன்கணக்கான பார்வையாளர்களை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரியும் அகிலனுக்கும் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணிபுரியும் கோகுலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் துறைமுகத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தன்யா ரவிச்சந்திரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘அகிலன்’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்துக்கு ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து மார்ச் 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெயம் ரவி முக்கிய கேரக்டரில் நடித்த ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.