close
Choose your channels

ஜெயம் ரவியின் 'கோமாளி' ரன்னிங் டைம்!

Tuesday, August 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த கோமாளி' திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது..

இந்த நிலையில் 'கோமாளி' திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் சுமார் 143 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் ரன்னிங் டைமை கொண்டுள்ளது. ஒரு காமெடி படத்திற்கு தேவையான சரியான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.