close
Choose your channels

சூர்யாவிடம் இருந்து ஜெயம் ரவிக்கு சென்றது 'துருவ நட்சத்திரம்'

Wednesday, January 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே சூர்யாவுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த படம் டிராப் ஆனது. அதன் பின்னர் கவுதம் மேனன் அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்திலும், சூர்யா, லிங்குசாமியின் 'அஞ்சான்' படத்திலும் பணிபுரிந்தனர்.


இந்நிலையில் 'துருவ நட்சத்திரம்' என்ற பெயரில் மீண்டும் ஒரு படத்தை இயக்க கவுதம் மேனன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'விண்ணை தாண்டி தருவாயோ', அழகர்சாமியின் குதிரை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்களை தயாரித்த மதன் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. டைட்டில் 'துருவ நட்சத்திரம்' என்று வைக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தின் கதை சூர்யாவுக்காக தயார் செய்த கதையா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் இதே தயாரிப்பாளரின் இன்னொரு படத்தையும் கவுதம் மேனன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கவுதம்மேனன் - ஜெயம் ரவியின் படத்திற்கு அனிருத்தும், கவுதம் மேனன் - தனுஷ் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜூம் இசையமைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.