close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படம், நாயகி இயக்குனர் அறிவிப்பு: வைரலாகும் மோஷன் போஸ்டர்!

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில், நாயகி மற்றும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்க உள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவு படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயம்ரவி ஏற்கனவே எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.