close
Choose your channels

ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த 'போகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வெற்றி பட வரிசையில் இணைந்துள்ள நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படமான 'வனமகன்' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்ப்பு முடிந்தது என்பதை பார்த்தோம்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இதே தேதியில் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய 'பவர் பாண்டி' மற்றும் ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'வனமகன்' திரைப்படமும் இணைந்துள்ளது.

ஜெயம் ரவி, சாயிஷா சேகல், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.