close
Choose your channels

சினேகனிடம் ஆவேசமாக வாதாடிய நாடகக்காரி ஜூலி

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை புரமோ வீடியோவில் ஜூலியை நாடகக்காரி என்று எந்த நேரத்தில் சுஜா கூறினாரோ, சமூக வலைத்தள பயனாளிகள் இன்று காலை முதல் ஜூலியை அந்த பெயர் சொல்லியே அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் வந்த இரண்டாவது புரமோ வீடியோவில் சினேகனுடன் ஆவேசமாக வாதாடுகிறார் ஜூலி.

என்னை நீங்கள் யாருமே உங்களில் ஒருவராக பார்க்கவில்லை என்று சினேகனிடம் கூறிய ஜூலி, 'நீங்கள் எல்லோருமே எனக்கு பின்னாடி என்னை பற்றி என்ன பேசினீர்கள் என்பதை படம் போட்டு காண்பித்தபோது என் நிலைமை எப்படி இருக்கும்? மேலும் என்னை 'போலி'ன்னு முதல்முதலில் கூறியதே நீங்கள் தான்' என்று கூறினார்.

இதற்கு சினேகன் எந்த பதிலும் கூற முடியாமல் திக்குமுக்காடி போகிறார். கடந்த சில நாட்களாகவே சினேகனின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து வரும் நிலையில் அனேகமாக இன்று முழுவதும் வெளுக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.