close
Choose your channels

'சார்பாட்டா பரம்பரை' படத்தில் நடித்த கே.பாலசந்தர் மருமகள்: ஆச்சரிய தகவல்!

Friday, July 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று படம் பார்த்தவர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களும் மனதில் பதியும் வகையில் உள்ளது என்பதும் அவர்களுடைய உண்மையான பெயரை மறந்து போய் கேரக்டரின் பெயர்கள்தான் ரசிகர்களுக்கு ஞாபகம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ’சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களின் மருமகள் நடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரான ரங்கன் வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்த பசுபதியின் மனைவியாக நடித்தவர் தான் கே பாலச்சந்தரின் மகள் கீதா என்பது குறிப்பிடத்தக்கது.

கீதா ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்கு தெரிந்தாலும் அவர் சிறப்பாக நடிப்பவர் என்பது இப்போதுதான் பலருக்கு தெரிந்துள்ளது. இந்த நிலையில் தனது நடிப்பு திறமையை ’சார்பாட்டா பரம்பரைப் திரைப்படத்தில் வெளிப்படுத்தியுள்ள கீதாவுக்கு மேலும் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.