close
Choose your channels

பிக்பாஸ்: ஆட்டோவில் வந்து இறங்கும் நடிகை யார்?

Friday, August 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவை வெளியேற்றியவுடன் அவரது வெற்றிடத்தை நிரப்ப சேனல் நிர்வாகமும் அவ்வப்போது ஆட்களை உள்ளே அனுப்பிக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்தான் கொஞ்சம் கூட மெருகேறவே இல்லை. பிந்துமாதவி, சுஜா வருணே, ஹரிஷ் என ஏற்கனவே மூன்று புதிய முகங்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே புதிய பங்கேற்பாளர்களாக நுழைந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு நடிகை எண்ட்ரி ஆகியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் விஜே ஆக பணியாற்றிய காஜல் பசுபதி என்பவர் தான் புதிய பங்கேற்பாளர். சரண் இயக்கி வரும் 'ஆயிரத்தில் இருவர்' உள்பட ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் இன்று பிக்பாஸ் வீட்டில் ஆட்டோவில் வந்து இறங்குவது போன்ற புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

புதிய பங்கேற்பாளராக வந்த காஜலை வழக்கம்போல் சினேகன் தனது பாணியில் வரவேற்றார். ஆனால் புதிய வரவால் காயத்ரியின் முகம் அஷ்டகோணலாக மாறியது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. ஒரே ஒரு ஓவியாவின் வெற்றிடத்தை இன்னும் எத்தனை அழகிகளை இறக்குமதி செய்தாலும் ஈடு செய்ய முடியாது என்று ஓவியா ஆர்மியினர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.