close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' ரன்னிங் டைம்

Saturday, May 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரன்னிங் டைம்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் முழுவேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ரிலீசுக்கு முந்தைய நாளான ஜூன் 6ஆம் தேதி பிரிமியர் காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் 'காலா' திரைப்படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பது தெரிந்ததே. தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் 165 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரஞ்சித் இயக்கிய முந்தைய படமான 'கபாலி' திரைப்படத்தின் ரன்னிங் டைம் 153 நிமிடங்கள் என்பதும் மெட்ராஸ் திரைப்படம் 158 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.