close
Choose your channels

மரணம் அடைந்த ரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய பிரபல நடிகர்

Saturday, May 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மரணம் அடைந்த ரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய பிரபல நடிகர்

பிரபல நடிகர் சிம்பு, தனது ரசிகர்களின் மேல் அளவற்ற அன்பு வைத்துள்ளவர் என்பது தெரிந்ததே. பல வருடங்களாக அவர் வெற்றிப்படம் கொடுக்காமல் இருந்தபோதிலும் அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றதே தவிர குறைந்ததில்லை

இந்த நிலையில் கடந்த வாரம் மதன் என்ற சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவர் எதிர்பாராமல் மரணம் அடைந்துவிட்டார். அவரது மறைவிற்கு நினைஞ்சலி போஸ்டர் அவரது நண்பர்கள் ஒட்டி கொண்டிருந்தனர்.

இதனை தற்செயலாக பார்த்த சிம்பு, உடனே அவர்களிடம் சென்று ஒரு போஸ்டரை வாங்கி அவரே சுவற்றில் ஒட்டினார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்ததோடு, மரணம் அடைந்த மதன் என்ற ரசிகரின் ஆத்மா நிச்சயம் சாந்தியடையும் என்று தெரிவித்தனர்.

ஒரு பெரிய ஸ்டார் நடிகர் தனது ரசிகனுக்காக தானே போஸ்டர் ஒட்டியது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.