close
Choose your channels

பாலியல் தொழிலாளி வேடத்தில் 'கபாலி' நடிகை

Wednesday, June 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தன்ஷிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது அனைவரும் தெரிந்ததே. ஏற்கனவே அவர் 'காத்தாடி' படத்தில் கனமான பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இதுவரை நடிக்காத இன்னொரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
பிரபல இயக்குனர் அனந்தமூர்த்தி இயக்கவுள்ள குறும்படம் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக தன்ஷிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விருதுகளை குறிவைத்து எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுடன் பிரபல வங்காள நடிகை Bidita Bag நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா பின்னணியில் இந்த குறும்படம் உருவாகவுள்ளதாகவும் இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு வரும் வாரங்களில் ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலியல் தொழிலாளி கேரக்டரில் தன்ஷிகா தற்போதுதான் முதல்முறையாக ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.