close
Choose your channels

விஜய்சேதுபதியின் வில்லனாகிறார் 'வேதாளம்' வில்லன்.

Sunday, May 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' படத்தில் வில்லனாக நடித்த கபீர்சிங் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'றெக்க' படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி வக்கீலாக நடிக்கின்றார். பெங்களூரில் வக்கீல் படிப்பு முடிந்தவுடன் தனது சொந்த ஊர் கும்பகோணத்திற்கு வரும் விஜய்சேதுபதி எதிர்பாராதவிதமாக இரண்டு கேங்ஸ்டர்களுடன் சிக்கிவிடுவதாகவும் அதன் பின்னர் என்ன நடக்கின்றது என்பதுதான் இந்த படத்தின் விறுவிறுப்பான கதை என்றும், இரண்டு கேங்ஸ்டராக 'வேதாளம்' கபீர்சிங் மற்றும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் இயக்குனர் ரத்தினசிவா தெரிவித்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் முதன்முதலாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு தந்தையாக கே.எஸ்.ரவிகுமார் நடிக்கவுள்ளார். தங்கமகன்' படத்தில் தனுஷூக்கு தந்தையாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய கே.எஸ்.ரவிகுமார் இந்த படத்திலும் அழுத்தமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தந்தை-மகன் உறவு இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 12ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.