close
Choose your channels

கேரளாவைக் கலக்கும் தமிழ் கிராமிய பாடலைக் கேட்டீர்களா..!

Friday, March 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அய்யப்பனும் கோசியும் என்ற மலையாளப்படத்தில் இடம்பெற்றுள்ள களக்காத்தா எனும் பாடல் இணையத்தில் 80  லட்சத்திற்கு மேல் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் வெளியான அய்யப்பனும் கோசியும் என்ற மலையாளப்படம் பிரித்வி ராஜ், பிஜு மேனன் சேர்ந்து நடித்து சச்சி இயக்கி சென்ற மாதம் வெளிவந்தது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் இடம்பெற்ற களக்காத்தா எனும் பாடலானது தமிழக மலை கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மா என்பவரால் பாடப்பட்டது. இது தமிழக மலைப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்களால் பாடப்படும் கிராமிய பாடலாகும்.

இந்தப் பாடல் வெளிவந்தவுடனேயே பல பேரால் ரசிக்கப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. பாடலை பாடிய நஞ்சம்மாவை பிரித்விராஜும், பிஜு மேனனும் நேரில் சென்று பார்த்தனர்.  இருவரையும் தனக்கு யாரென்றே தெரியவில்லை என நஞ்சம்மா சொல்வதாக வீடியோ முடிகிறது. அய்யப்பனும் கோசியும் படமானது வெற்றிகராமாக ஓடி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.                

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.