close
Choose your channels

ரஜினிக்கு உதவ தயார், ஆனால் ஒரு கண்டிஷன்: சுப்பிரமணியசாமி நிபந்தனை 

Friday, March 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிக்கு அரசியல் ஆலோசனை வழங்கவும் அவருக்கு உதவி செய்யவும் தான் தயார் என்றும் ஆனால் அதற்கு ரஜினிகாந்த் ஒரு நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீக அரசியல் செய்ய இருப்பதாக ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக கூறி வரும் நிலையில் இந்த ஆண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீக அரசியல் என்றாலும் அவர் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் ஆதரவாக இல்லாமல் அனைத்து மதத்திற்கும் பொதுவானவராக ரஜினிகாந்த் இருப்பார் என்று அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு அரசியல் ஆலோசனை வழங்கவும் உதவும் உதவி செய்யவும், தான் தயாராக இருப்பதாகவும் ஆனால் அவர் இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்று உத்தரவாதம் தரவேண்டும் என்றும் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ரஜினி, கமல் ஆகிய இருவரையுமே கடுமையாக விமர்சனம் செய்து வந்த சுப்பிரமணியசாமி, சமீபத்தில் துக்ளக் விழாவில் ரஜினி பேசியதை அடுத்து அவருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’ரஜினிகாந்த் அரசியலுக்கு இன்னும் வரவில்லை, அவர் முழுமையாக வந்த பிறகே அவரது கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்ய முடியும். அதுவரை விமர்சனம் செய்ய முடியாது. ஆன்மீக அரசியல் என்று கூறும் ரஜினிகாந்த் இந்து மதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார் என்றால் அவருக்கு உதவி செய்ய தயார், அவருக்கு அரசியல் ஆலோசனை வழங்கவும் தயார் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.