close
Choose your channels

திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை: பிளஸ் 2 ரிசல்ட் குறித்து கமல்ஹாசன்

Thursday, July 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளிவந்தது என்பதும், மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இணையதளங்களில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பதும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 92.3 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தோல்வி அடைந்த மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம் என்றும் அடுத்த முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் யாரும் தவறான முடிவை எடுத்து விட வேண்டாம் என்றும் பலர் தங்களது சமூக வலைதளங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு குறித்தும், மதிப்பெண்கள் குறித்தும், உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: மாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள். பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.