close
Choose your channels

முறுக்கு மீசை, வெண் தாடி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமலின் லுக் இதுதான்

Tuesday, August 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் எதிர்பார்த்ததை விட நல்ல சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காம் சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக விஜய் டிவி தரப்பிலிருந்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்காக அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி விட்டதாகவும், போட்டியாளர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இம்முறை போட்டியாளர்களாக வனிதா விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூர்யாதேவி, நடிகை ரம்யா பாண்டியன், கோபிநாத், நடிகை சனம் ஷெட்டி, ஜோ மைக்கேல் உள்பட ஒருசில தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் அவர்களின் கெட்டப் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முறுக்கு மீசை மற்றும் வெண் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் கமலஹாசனின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் அட்டகாசமான இந்த கெட்டப்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.