close
Choose your channels

உலக நாயகனின் ரியல் மகளை முந்திய ரீல் மகள்

Sunday, July 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பெரும் வரவேற்புடன் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. கமல்ஹாசன், கவுதமி மற்றும் இருவரின் மகள்களாக நடித்திருந்த நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர்களின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை.

இந்நிலையில் 'பாபநாசம்' படம் மட்டுமின்றி இதன் ஒரிஜினல் படமான மலையாள த்ரிஷ்யம், மற்றும் தெலுங்கு பதிப்பான த்ரிஷ்யம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்த குட்டிப்பாப்பா எஸ்தன் அனிலுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

தென்னிந்தியாவின் மூன்று முக்கிய மொழிகளில் இவர் நடித்துள்ளதால் இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பிரபலமாகிவிட்டார். முதல் தமிழ்ப் படத்திலேயே உலக நாயகனுடன் நடிக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை பெற்ற எஸ்தர் அனில், சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனைவிட அதிக லைக்குகள் பெற்று சாதனை பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 2.3 மில்லியன் லைக்குகளுக்கு அதிகம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ரியல் மகளான அக்ஷராஹாசனுக்கே 49 ஆயிரம் லைக்குகள் மட்டுமே சமூக வலைத்தளத்தில் உள்ள நிலையில் அவரது ரீல் மகள் அவரை முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.