close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்த கமல்-இளையராஜா

Saturday, January 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைத்து வந்தார். ஆனால் சமீபகால கமல் படங்களுக்கு இசைஞானி இசையமைக்காத நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசனும் இளையராஜாவும் இணைந்துள்ளனர். அதாவது இளையராஜா இசையமைத்த ஒரு படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.


இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கியுள்ள படம் 'ஓயே'. மார்க்கஸ் ஸ்டுடியோ பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பாடல்களை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட அதை இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கலந்து கொண்டது கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு இசைஞானிதான் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.