close
Choose your channels

'இந்தியன் 2' படத்திற்காக கார் பரிசளித்த கமல்.. யாருக்கு கொடுத்தார் தெரியுமா?

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக தன்னை உடலளவில் தயார் செய்ய கமல்ஹாசன் சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டார் என்பதும் அவருக்கு சிறப்பு பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்திற்காக தன்னை உடல் அளவில் தயார் செய்த பயிற்சியாளருக்கு கமல்ஹாசன் விலை உயர்ந்த ரெனால்ட் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமலஹாசன் சமீபத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை பார்க்கும் போதே அவர் இந்த படத்தில் மிகவும் இளமையான உடலமைப்பிற்கு மாறியுள்ளார் என்பதை அனைவரும் அறிந்தோம். அந்த அளவுக்கு அவரை முழுவதுமாக மாற்றிய உடற்பயிற்சி பயிற்சியாளருக்கு தற்போது கார் பரிசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’இந்தியன் 2’ படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடித்து விட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், பாபி சிம்ஹா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos