close
Choose your channels

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால்.. கமல்ஹாசன் பேச்சு

Monday, June 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால்.. கமல்ஹாசன் பேச்சு

உலக நாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. கமல் ரசிகர்கள் மட்டுமின்றி ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் 'விஸ்வரூபம்' படத்திற்கு பிரச்சனை வந்தது போல் 'விஸ்வரூபம் 2' படத்திற்கு பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'விஸ்வரூபம் 2' படத்திற்கு எதிர்ப்பு வராது என நம்புகிறேன். ஒருவேளை எதிர்ப்பு வந்தால் அதை அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயாராகிவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் தாமதத்திற்கு காரணம் ராஜ்கமல் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். முதல் பாகத்தின் தாமதத்திற்கு என்ன காரணமோ அதேபோன்ற ஒரு காரணம் தான் இந்த படத்தின் தாமதத்திற்கும் காரணம் என்று கமல் கூறினார். பின்னர் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரின் பெயரை வாசித்த கமல், அவர்கள் அனைவருக்கு நன்றி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.