close
Choose your channels

'காஞ்சனா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Saturday, May 18, 2019 • தமிழ் Comments

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களான 'காஞ்சனா 2' மற்றும் 'காஞ்சனா 3' ஆகிய படங்களும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் 'காஞ்சனா' திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் தற்போது இந்தியில் இயக்கி வருகிறார்.

அக்சயகுமார், கைரா அத்வானி முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் டைட்டில் 'லட்சுமி பாம்' என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அக்சயகுமார் கண்ணுக்கு மையிடுவது போன்ற இந்த ஃபர்ஸ்ட்லுக் அனைத்து தரப்பினர்களையும் கவரந்துள்ளது. மேலும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மாதவன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார்
 

Get Breaking News Alerts From IndiaGlitz