close
Choose your channels

 'கங்குவா' படத்தின் அந்த 'உதிரன்' இவர் தானா? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

Saturday, January 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ’உதிரன்’ என்ற கேரக்டரின் போஸ்டர் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் ’உதிரம்’ உள்ள கைகளுடன் இருக்கும் ’உதிரன்’ போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இன்று பாபி தியோல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய இந்த படத்தின் மாஸ் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போதே மிரட்டலாக உள்ளது என ரசிகர்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். வேற லெவலில் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.